Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு..உடல் நிலையில் கவனம் இருக்கட்டும்..மனதில் உற்சாகம் பிறக்கும்..!!

 ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பிறரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் நல்ல பெயர் ஏற்படும். தொழில் வியாபாரம் சீர்பெற புதிய மாற்றங்களை செய்ய வேண்டும். அளவான பணவரவு தான் இன்று கிடைக்கும். உணவு ஒவ்வாமையால் அஜீரணம் போன்றவை ஏற்படலாம். ஆகையால் உடல்நிலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று  எல்லா பிரச்சனைகளையும் குடும்ப ஒற்றுமை ஏற்படும். வீண் வாக்குவாதம் மட்டும் அவ்வப்போது வந்து செல்லும். மனதில் உற்சாகம் ஏற்படும். வீண் பகை கொஞ்சம் ஏற்படலாம். தீ, ஆயுதம் கையாளும் பொழுது கொஞ்சம் கவனமாகவே இருங்கள்.

நண்பரிடமிருந்து பிரிய வேண்டிய சூழல் இருக்கும். நண்பரிடம் பேசும்பொழுது நிதானமாகவே பேசுங்கள். அவர்களிடம் எந்தவித வாக்குவாதங்களும் வேண்டாம். இன்று  கௌரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக தான் செயல்பட வேண்டும். இன்று  மாணவச் செல்வங்கள் கல்வியில் கொஞ்சம் கவனம் செலுத்திப் படியுங்கள், தேர்வு முடியும் வரை கொஞ்சம் பாடங்களை தெளிவாக படியுங்கள், படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள். தேர்வு முடியும் வரை விளையாட்டை ஓரங்கட்டிவிட்டு  பாடத்தில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும் .அது மட்டும் இல்லை இன்று  சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமா திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: கரு நீலம் மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |