கோவையை சேர்ந்த சிந்து மோனிகா(29) இதுவரை 1400 பச்சிளம் குழந்தைகளின் பசியை போக்க தாய்ப்பால் தானம் செய்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் குழந்தை பெற்றுக் கொண்ட அவர், சில மாதங்களில் தாய்ப்பாலினை பம்ப் செய்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் இதுவரை 42 லிட்டர் பாலை பாக்கெட் செய்து அனுப்பியிருக்கிறார்.
இதில் தமிழ்நாடு அரசின் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தைகளுக்கு சிந்து அளித்த தாய்ப்பால் அளவு 42,000 மில்லி லிட்டர் ஆகும். கடவுள் எப்போதுமே நேரடியாக பூமிக்கு வருவதில்லை.