முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் உயர்கல்வி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர் தகுதிக்கு கீழ் இருக்கும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் விதவையர்களின் குழந்தைகள் ஐஐடி, ஐஐஎம் மற்றும் தேசிய சட்டப் பள்ளிக்கூடங்களில் பயின்று வந்தால் 2022-23 ஆம் கல்வியாண்டில் முதல் தொகுப்பு நிதியிலிருந்து 50,000 ரூபாய் கல்வி தொகையாக கொடுக்கப்படுகின்றது.
ஆகையால் தகுதியும் விருப்பமும் இருக்கும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் விதவையர்கள் தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து உதவித்தொகையை பெறுமாறு கேட்டுக் கொள்வதாக கூறியிருக்கின்றார்.