அமெரிக்காவில் நண்பனின் வலியுறுத்தலால் லாட்டரி டிக்கெட் வாங்கிய நபருக்கு 1.22 கோடி பரிசு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மியாவ் சேர்ந்த டேனி ஜான்சன் என்ற நபர் தனது நண்பருடன் செல்லும்போது அவர் தொடர்ந்து வற்புறுத்தியதால் லாட்டரி டிக்கெட்களை வாங்கியுள்ளார்.
நீண்ட நாட்களாகவே இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த ஜான்சன் , ஒருமுறை மட்டும் வாங்குகிறேன் என்ற கட்டாயத்தில் தனது நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு லாட்டரி வாங்கியுள்ளார். அந்த ஒத்த லாட்டரியில் அடித்தது அதிர்ஷ்டம் என்பது போல அவரது லாட்டரிக்கு 1.22 கோடி பரிசு விழுந்து உள்ளது. இந்த சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.