பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் கடல் படம் மூலமாக நாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தந்திரன், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.இவரும் நடிகை மஞ்சிமா மோகனும் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த நிலையில் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் தற்போது இருவரும் காதலித்துருவதாகவும் தகவல் வெளியாகி வந்தது.
இதனை அடுத்து இதனை உறுதிப்படுத்தும் விதமாக இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். திருமணம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தங்களது காதல் குறித்து பேசிய கவுதம், நாங்கள் ஒருவருடமாக நட்பாக பழகினோம். பிறகு நான்தான் காதலை மஞ்சிமாவிடம் கூறினேன். ஆனால் அவர் 2 நாட்கள் கழித்தே என் காதலை ஏற்றுக்கொண்டார். 3 வருடங்களாக காதலித்து வந்தோம், திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் எளிமையாக நடைபெறும் என்று நெகிழ்ச்சியாக கூறினார்.