சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக சிலர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் அவர் வேடந்தூர் பகுதியில் வசிக்கும் மகேந்திரபிரசாத்(23) என்பது தெரியவந்தது. இவர் சட்ட விரோதமாக அப்பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் உறுதியானது. இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் மகேந்திரபிரசாத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஐந்தாயிரம் லாட்டரி சீட்டுகள் மற்றும் 18000 ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.