கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய கோகுல்ராஜ் உடைய தோழி சுவாதி இன்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பதற்காக நேரில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை தொடர்ந்தது, இன்று காலை சுவாதி நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டார். பின்னர் நீதிபதிகள் ஆனந்த வெங்கடேச அமர்வில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்த விசாரணையின் போது தனக்கு எதுவும் தெரியாது என்று பதிலையும், நான் அவள் இல்லை என்ற பதிலையும் தொடர்ந்து சுவாதி அளித்து வந்தார். இந்நிலையில் நீதிபதிகள் இதுபோன்ற பதிலை நீங்கள் அளித்தால் உங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்து, 15 நிமிடம் உங்களுக்கு அவகாசம் தருகிறோம். யோசித்து திரும்பவும் சொல்லுங்கள் என்று 12.45 மணிக்கு நீதிபதிகள் இறங்கி சென்று விட்டு, மீண்டும்1 மணிக்கு வந்து அமர்ந்தனர்.
இந்த இடைவெளியில் தான், தனக்கு மயக்கமாக வருகிறது என்று அருகில் நின்ற காவல்துறையினரிடமும், சக வழக்கறிஞரிடம் சுவாதி தெரிவித்திருந்தார். உடனடியாக அவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு இரண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நீண்ட நேரம் இன்று விசாரணையை எதிர்கொண்டதால், அசதியின் காரணமாக மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அரை மணி நேரத்தில் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் தற்போது தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர் இங்கே வைத்து சிகிச்சை பெறுவாரா ? இல்ல அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவாரா ? என்பது ஒரு அரை மணி நேரம் கழித்து தான் தெரிய வரும்.