Categories
தேசிய செய்திகள்

“ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம்”…. புது பயங்கரவாத அமைப்பு பொறுப்பு…. வெளியான தகவல்….!!!!!

கர்நாடகா மாநிலம் மங்களூரில் கடந்த 19ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதற்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் நாச வேலைக்கு திட்டமிட்ட சூத்திரத்தாரியான ஷாரிக்கே பலத்த தீக்காயமடைந்தார். அதுமட்டுமின்றி ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் என்பவரும் காயமடைந்தார். தற்போது இருவரும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக்கிற்கு 8 பேர் கொண்ட மருத்துவர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில் அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டார் எனவும் இன்னும் 25 நாட்களுக்கு தொடர் சிகிச்சையளிக்கவும் மருத்துவ குழுவினர் முடிவுசெய்துள்ளனர். குண்டு வெடிப்பில் ஷாரிக் படுகாயம் அடைந்துள்ளதால் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த முடியவில்லை. அவர் குணமான பின்பு தான் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டு உள்ளனர். ஆகவே ஷாரிக் வாய் திறந்தால் தான் இவ்வழக்கில் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இந்த வழக்கை மாநில காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தற்போது அடக்கு முறைக்கு எதிரான இஸ்லாமிய அமைப்பு என்ற புது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து அந்த அமைப்பு அரபுமொழியில் சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு அறிக்கையை பதிவு செய்துள்ளது. அந்த அறிக்கை 23/11/2022 என்ற தேதியில் வெளியாகி இருக்கிறது . அதில் அமைப்பு பெயருடன், ஷாரிக்கின் இரண்டு பழைய படங்கள் இடம்பெற்றுள்ளது. அதாவது, சிவமொக்கா காட்டுப் பகுதியில் வெடிகுண்டு பயிற்சி பெற்ற ஷாரிக்கின் படம், மற்றொன்று அவர் குக்கர் குண்டுடன் உள்ள படமாகும்.

 

Categories

Tech |