சாலைப்பாதுகாப்பு விழ்ப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் சச்சின் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சச்சின் , சேவாக் , யுவராஜ் என்றாலே ஒரு மாஸ் தான். அவர்களின் ஆட்டத்தை பற்றி 90 கிட்ஸ் நன்றாகவே சொல்வார்கள். சச்சின் என்றால் அப்பர் கட் ஷார் அடிப்பதாக இருக்கட்டும் , சேவாக் அதிரடியாகட்டும் , யுவராஜ் சிக்ஸர் ஆகட்டும் இதனை TVயில் பார்ப்பதே தனி ஆனந்தம் என்றால் மிகையாகாது. இப்போது கிரிக்கெட்டில் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் அனைவருக்கும் ஒரு ஊக்கத்தை கொடுத்தாலும் சச்சின் , சேவாக் , யுவராஜ் இவர்களின் ஆட்டத்தை பார்க்கமாட்டோமா என்ற ஏக்கம் 90 கிட்ஸ் ரசிகர்கள் முகத்தில் தெரியும்.
ரசிகர்களின் ஏக்கத்துக்கு தீனி போடக்கூடிய வகையில் தற்போது நடைபெறும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் அமைந்திருக்கின்றது. 90ஆம் ஆண்டு காலகட்டத்தில் கிரிக்கெட்டை ரசித்தவர்கள் பார்த்த கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் போட்டியாக இந்த தொடர் அமைந்துள்ளது. நேற்று நடந்த முதல் போட்டியில் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணியும் , சச்சின் தலைமையிலான இந்தியா லெஜெண்ட் அணியும் மோதியது.
இதில் சச்சின் தலைமையிலான அணியில் சேவாக் , சச்சின் , யுவராஜ் , கைப் , ஜாகீர் பதான் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் சச்சின் அணி வெற்றி பெற்றது. தொடக்க வீர்ர் சேவாக் 74 ரன் குவித்ததில் சச்சின் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியை 90 காலகட்ட ரசிகர்கள் மிக உற்சாகமாக கண்டு ரசித்தனர். வயதான முதியவர்கள் பலரும் இந்திய அணி வெற்றியை கொண்டாடினார்.
இது தொடர்பாக ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. அதில் ஒரு வயதான மூதாட்டி இந்திய அணியின் ஸ்கோரை உண்ணிய்ப்பாக கவனித்து வெற்றி பெற்றதும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினார். இந்த வீடியோ இன்னுமும் சச்சின் , சேவாக் மீதுள்ள தாக்கத்தை மற்ற ரசிகர்களுக்கு உணர்த்தியுள்ளது.
Wat a visual treat
Sehwag's first ball boundary
Sachin's uppercut
Sehwag' half century
Yuvi's 6As if ..bachpan …firse jee liya…@sachin_rt @virendersehwag @YUVSTRONG12
Thankx for making myself and my dadima happy#fandadi#RoadSafetyWorldSeries pic.twitter.com/Hgh6TqATEc
— अkhil पिllai (@AkhilPillai08) March 7, 2020