இஸ்ரோ நாளை காலை ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரேல் ராக்கெட்களை தயாரித்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. அதைப்போல் தற்போது பி.எஸ்.எல்.வி.சி-54 என்ற ராக்கெட் நாளை காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இது புவி செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள் ஆகியவற்றை சுமந்து செல்லும். இந்நிலையில் அதன் மாதிரியை பிரபல கோவிலான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு மேல தாளங்கள் முழங்க தீர்த்த பிரசாதங்கள் மற்றும் லட்டு வழங்கப்பட்டுள்ளது.