திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி மாநில மாணவரணி தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். திமுகவினுடைய மாநில மாணவரணி தலைவர், செயலாளர், இணை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. திமுக சட்டப்பதிகளின்படி இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக தலைமை நிலையத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார்.
அதன்படி திமுகவினுடைய மாணவரணி தலைவராக ராஜீவ் காந்தி அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே கொள்கை பரப்பு இணைச் செயலாளராக செயல்பட்டு வந்தவர் தற்பொழுது மாநில மாணவரணி தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கின்றார். ஏற்கனவே மாணவரணி செயலாளராக இருந்த காஞ்சிபுர தொகுதியின் உடைய சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மாணவர் அணியினுடைய செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல மாணவரணி இணைச் செயலாளர்களாக சென்னை சேர்ந்த ஜனால்ட் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
மாணவரணி உடைய துணை செயலாளர்கள் சோழராஜன், தமிழரசன், செந்தில்குமார், அமுதரசன் ஆனந்த் உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட நபர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். திமுகவை பொருத்தவரை மகளிர் அணி, இளைஞரணி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கும் தொடர்ந்து நியமனம் செய்யப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் இன்றைய தினம் மாநில மாணவர் அணி தலைவர், இணை செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் பொறுப்புகளுக்கான அந்த பெயர் பட்டியல் ஆனது வெளியிடப்பட்டிருக்கிறது.