இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மையமாகிவிட்டது. இது ஒரு பக்கம் மக்களுக்கு சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் ஆன்லைன் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அதனால் காவல் துறையினருக்கு மோசடியை கண்டுபிடிப்பதில் புதிய சிக்கல் ஏற்படுகின்றது. அவ்வகையில் குற்றங்களை தடுக்க உதவும் ஹேக்கர்களுக்கு போட்டி வைக்க சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி சிசிடிவி குறைபாடுகளை களையும் ஹேக்கர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. தினம்தோறும் காவல்துறை சந்தித்து வரும் பிரச்சனைகளை தீர்க்கும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது. இதன் மூலமாக ஆன்லைன் குற்றங்கள் தடுப்பது மட்டுமல்லாமல் தொழில்நுட்பத்தை நல்ல விதத்தில் பயன்படுத்தலாம் என்ற நோக்கத்தில் காவல்துறை இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.