உலகமே நவீன மயமாகி விட்ட நிலையில் சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருடைய கைகளிலுமே செல்போன்கள் இருக்கிறது. இந்த செல்போன்கள் கையில் இருப்பதால் ஆன்லைனில் நேரத்தை செலவழித்து வரும் இன்றைய கால இளைஞர்கள் காதல் வலையில் சிக்கி தங்களுடைய வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள்.
அந்த வகையில், பிளாங்கா (51) என்ற பெண், தனக்கு ஆன்லைன் மூலம் அறிமுகமான ஜுவான் என்பவரை, மெக்சிகோவில் இருந்து பெருவிற்கு கிட்டத்தட்ட 5000km கடந்து சென்று சந்தித்துள்ளார். அங்கு, இருவரும் ஒருவாரம் ஒன்றாக இருந்த நிலையில், ஜுவான் அந்த பெண்ணை கொலை செய்து, அவர் உடல் உறுப்புகளை விற்றுள்ளார். பின்னர், பிளாங்காவை காணவில்லை என உறவினர்கள் அளித்த புகாரையடுத்து, விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.