Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாற்றம் அடிக்குது…! மிருகம் கூட போகாது… செல்வப்பெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற பொதுக்கணக்கு குழுத் தலைவருமான செல்வப் பெருந்தகை,  சிஏஜி என்ன கொடுத்திருக்கிறார்களோ,  அதற்குள் நான் போக முடியும். அதே மீறி போக முடியாது.  1948-இல் இருந்து நிலுவையில் இருக்கின்ற வழக்குகள் எல்லாம் இருக்கிறது. இப்போதுதான் ஒவ்வொவொன்றாக  எடுத்துட்டு வருகிறோம்.

இன்றைக்கு சில தகவல்களை எடுத்து இருக்கிறோம். எதற்காக என்றால் ? கால நேரம் கம்மி, அடுத்த முறை வருவோம். தொடர்ந்து இதை விசாரிப்போம். இன்றைக்கு எடுத்திருக்கின்ற துறை மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கம் மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நகராட்சி குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நீர்வளத்துறை, உயர்கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை, நிதித்துறை, வணிகவரித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை.

மாணவர் விடுதியில் பார்த்தீர்கள் என்றால்…  ஒரு விடுதிக்கும் இன்னொரு விடுதிக்கும் பாகுபாடு இருக்கிறது. அந்த பாகுபாடு கலையப்பட வேண்டும். ஆதிதிராவிடர் நலவிடுதியில் மாணவர்கள் தங்கும் அளவிற்கு அங்கு இருக்கின்ற சமையல் கூடங்கள்,  உணவு உண்ணும் இடமெல்லாம் இன்னும் சொல்லப்போனால்…  மிருகங்களே அங்கே உள்ள போகாத அளவிற்கு ஒரு துர்நாற்றம், புகை மூட்டம், சுகாதாரமாக இல்லை என தெரிவித்தார்.

Categories

Tech |