Categories
அரசியல் மாநில செய்திகள்

தம்பி தம்பின்னு சொல்லுவாங்க…! கிறிஸ்டின் என்பதால் பாசமா இருப்பாங்க.. நெகிழ்ந்து பேசிய சூர்யா சிவா ..!!

செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த சூர்யா சிவா மற்றும் டெய்சி சந்தித்தனர். இதில் பேசிய சூர்யா சிவா, தனிப்பட்ட இருவருக்கும் இடையேயான உரையாடல். அதுல வந்து எங்க மாநில தலைவர் சொன்ன மாதிரி,  அது தனிப்பட்ட முறை இருந்தாலும் சரி,  பொது தளத்தில் இருந்தாலும் சரி,  கட்சி கண்டிப்பாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கும் என மாநில தலைவர் சொன்ன மாதிரி,  இன்னைக்கு ஒழுங்கு நடவடிக்கை குழுவை சந்திக்க சொன்னாங்க.

அண்ணன் சபாபதி அவர்கள் தலைமை நடந்துச்சு. நாங்க இருவருமே எங்களுடைய தரப்புல,  என்ன சூழ்நிலையில் அந்த வாக்குவாதம் வந்தது. என்ன பேசுனோம் என்பதை இருவரும் எழுத்துப்பூர்வமாகவும் கொடுத்துள்ளோம், நேரிலும் விளக்கம் கொடுத்துள்ளோம். அக்கா தரப்பில் இருந்து நாங்க நல்ல பிரியத்தோடு தான் இருந்தோம். கட்சிக்கும் இதனால் நிறைய பிரச்சனை வருது.

அதனால எங்களோட பிரச்சினைகளை சுமூகமாக முடிச்சிக்கிறோம். எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்க என சொன்னோம். அக்கா தரப்பில் இருந்தும் அந்த ஆடியோ போல. இதன் நான் வெளில கொடுக்கல. இது வேற வழியில் வெளில போயிருந்தா ? அது யார் என்பதை கட்சி கண்டுபிடிக்கட்டும். இதை எங்களோடு சொல்லி கட்சிக்கு கெட்ட பெயர் வரணும் என்ற  எண்ணம் இல்லை. என்னிடமும் கேட்டபோது நான் என்னுடைய விளக்கத்தை கொடுத்து இருக்கிறேன்.

நான் கொடுத்திருக்கிற அறிக்கையிலும் கட்சி நான் பேசியது தவறு என்று சொல்லும்  சூழலில்,  என் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுகின்றேன். மாநில தலைவருக்கு கட்டுப்படுகின்றேன் என்று அறிக்கையில் கொடுத்துள்ளேன். மாநில தலைவருக்கு அறிக்கையை தாக்கல் செய்த பிறகு தலைவர் என்ன முடிவு எடுப்பாங்க, எடுக்கட்டும். இந்த பிரச்சனைக்கு முன்னாடி  இருவரும் இணைக்கமான சூழ்நிலையில் தான் இருந்தோம்.

நான் தம்பி என்கிற பிரியத்தில் தான் அக்கா எப்போவும் பேசுவதுண்டு. என்னுடைய மனைவியும் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவரால் அக்காவும் அவர்களிடம் பிரியமா இருப்பாங்க. இந்த மாதிரி ஒரு குடும்ப ரீதியாக நடுப்போடு தான் இருந்தோம். ஒரு கசப்பான சூழ்நிலை வந்தது. அதனால கட்சிக்கு கெட்ட பெயர் வருது. அதனால அதனை நாங்க வளர்க்க விரும்பல. அதனால சுமுகமாக முடிச்சுகிறோம் என்பது எங்கள் கருத்தாக இருக்கின்றது. அதையும் மீறி நான் பேசிய விஷயத்துல தலைவருக்கு நடவடிக்கை எடுக்கின்ற கட்டாயம் இருக்கக்கூடிய சூழலில்,  நான் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றேன் என தெரிவித்தார்.

Categories

Tech |