Categories
உலக செய்திகள்

97 நாடுகள்….. லட்சம் பேர் பாதிப்பு…. கொரோனாவால் நடுங்கும் உலக நாடுகள் …..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா என்ற ஒற்றைச் சொல்லுக்கு தான் உலகமே தற்போது அஞ்சி நிற்கிறது.சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 97 நாடுகளுக்கு பரவி நிற்கிறது.உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 80 ஆயிரத்து 651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை மட்டும் புதிதாக 99 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3070 ஆக உள்ளது. 55 ஆயிரம் பேர் பூரண குணமடைந்து இருக்கும் நிலையில் 5 ஆயிரம் பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சீனாவில் 80,000 பேருக்கும், பிற நாடுகளில் 20,000 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் உலகெங்கும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக தென் கொரியா , ஈரான் , இத்தாலி ஆகிய நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.தென்கொரியாவில் 6767 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானில் 4 ஆயிரத்து 747 பேருக்கு வைரஸ் தொற்று உள்ள நிலையில், 124 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இத்தாலியில் 4,636 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 197 பேர் உயிரிழக்கின்றனர்.

ஏழை நாடு, பணக்கார நாடு என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலக வல்லரசான அமெரிக்காவின் 332 பேருக்கு கொரோனா தொற்று உள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.செர்பியா , வாடிகன் , பூட்டான் ஆகிய நாடுகளில் முதல்முறையாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்காவின் கலிபோர்னியா கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள பிரின்சஸ் சொகுசு கப்பலில் உள்ள 21 பேருக்கு கொரோனா வைரஸ்இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கப்பலில் மொத்தம் 3000 பேர்வரை இருக்கும் நிலையில் அனைவருக்கும் தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்படுவதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |