Categories
இந்திய சினிமா சினிமா

கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலுக்கு பிரபல வாரிசு நடிகையுடன் டும் டும் டும்….. ரசிகர்கள் வாழ்த்து…..!!!!!

பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா. இவர் பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார். நடிகை அதியாவும் கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிடுவார்கள். இருவரின் காதலுக்கும் இரு வீட்டார் சம்மதம் தெரிவித்த நிலையில், தற்போது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.எல் ராகுல் அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற போது கூட நடிகை அதியாதான் அவருக்கு துணையாக சென்றார்.

இந்நிலையில் நடிகர் சுனில் செட்டியின் குடும்பத்தினருக்கு நெருக்கமான ஒருவர் அடுத்த வருடம் ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து நடிகை அதியாவுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை என்பதால் கே.எல் ராகுலின் பங்களாவில் வைத்து திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. தன்னுடைய மகளின் விருப்பப்படி சுனில் செட்டியும் அவரின் திருமணத்தை நடத்தி முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கே.எல் ராகுல் மற்றும் அதியாவுக்கு தற்போது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |