சுரேஷ் ரெய்னாவின் 12 ஆண்டுகால சாதனையை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தகர்த்துள்ளார்..
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டி20 கிரிக்கெட் தொடரை 1: 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இன்று முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது..
அதன்படி முதலில் பேட்டிங் செய்த, கேப்டன் ஷிகர் தவான் 72 (77) மற்றும் ஷுப்மான் கில் 50 (65) ஆகியோர் சிறந்த தொடக்கத்தை கொடுத்தனர். தொடக்க வீரர்கள் இருவரும் தத்தம் அரை சதங்களைப் பதிவு செய்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் மீண்டும் ஒருமுறை நிலைத்து நின்று 76 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார்.. மேலும் கடைசியில் 23 வயதான இளம்வீரர் வாஷிங்டன் சுந்தர், அற்புதமான இன்னிங்ஸ் ஆடியதால் இந்தியா 50 ஓவர்களில் 306 ரன்களை குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 47. 1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.. கேன் வில்லியம்சன் 98 பந்துகளில் 94* ரன்களும், டாம் லேதம் 104 பந்துகளில் 19 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 145* ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் நின்று அணியை வெற்றிபெற வைத்தனர்.. இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து 1: 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி நவம்பர் 27 ஆம் தேதி ஹாமில்டனில் செடான் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஒரு சாதனை படைத்துள்ளார். அதாவது, 16 பந்துகளில் (3 பவுண்டரி, 3 சிக்ஸர்) 37* ரன்கள் எடுத்து திகைப்பூட்டும் கேமியோ ஆடிய, இந்திய ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், நியூசிலாந்து மண்ணில் ஒரு இந்தியரின் அதிவேக 30+ ஸ்கோரை அடித்த சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்தார். முன்னதாக சுரேஷ் ரெய்னா, 211.11 ஸ்ட்ரைக் ரேட்டில், 2009 இல் பிளாக் கேப்ஸுக்கு (நியூசிலாந்து) எதிராக 18 பந்துகளில் 38* ரன்கள் எடுத்தார். எனவே அன்றிலிருந்து அந்த ஸ்கோர் சாதனையாக இருந்தது. இந்த நிலையில் தான் இன்றைய போட்டியில் சுந்தர் 231.25 என்ற இடியுடன் கூடிய ஸ்டிரைக் ரேட்டில் ரெய்னாவை கடந்து சாதனை படைத்துள்ளார்.
10 alphabets in Suryakumar
10 alphabets in Washington🫣🫣🫣#NZvIND #WashingtonSundar pic.twitter.com/p0hCmjZcKG
— Punjab Kings (@PunjabKingsIPL) November 25, 2022