இன்று ஸ்ரீலங்கா லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் அணி பலப்பரீட்சை நடத்துகின்றது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் நேற்று முதல் நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய லெஜெண்ட் , வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் , சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட் , ஸ்ரீலங்கா லெஜெண்ட் ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன.
மும்பையில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணிக்கெதிரான ஆடிய போட்டியில் இந்திய லெஜெண்ட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் பிரட் லீ தலைமையிலான ஆஸ்திரேலிய லெஜெண்ட் அணியும் , தில்ஷன் தலைமையிலான ஸ்ரீலங்கா லெஜெண்ட் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பையில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகின்றது.
ஆஸ்திரேலிய லெஜெண்ட் அணி :
பிரட் லீ (கேப்டன்), பிராட் ஹாட்ஜ், பிரட் கீவ்ஸ், கிளின்ட் மெக்கே, ஜார்ஜ் கிரீன், ஜேசன் கிரெஜ்ஸா, மார்க் காஸ்கிரோவ், நாதன் ரியர்டன், ராப் குயின்னி, ஷேன் லீ, டிராவிஸ் பிர்ட், சேவியர் டோஹெர்டி.
ஸ்ரீலங்கா லெஜெண்ட் அணி :
தில்லகரத்ன தில்ஷன் (கேப்டன்), டி விஜேசிங்க, சாமரா கபுகேதரா, சாமிந்த வாஸ், ஃபர்வீஸ் மஹாரூப், மார்வன் அட்டப்பட்டு, முத்தையா முரளிதரன், ரங்கனா ஹெராத், ஆர் கலுவிதரணா, எஸ் சேனநாயக்க, டி துஷாரா, டி சந்தம்பி.