Categories
மாநில செய்திகள்

204 பேர் மேல குண்டாஸ்..! அதிரடிய காட்டிய ஐஜி…. பாராட்டாமல் இருக்க முடில… மெர்சலாகிய ஜான் பாண்டியன் ..!!

செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன்,  தென்மண்டல ஐஜியின் நடவடிக்கைகள் கொஞ்சம் சரியா இருக்குது. கெட்டிக்காரத்தனமா இருக்குது. என்னை கேட்டால் அவரை பாராட்டாமல் இருக்க முடியாது. இன்னைக்கு கூட நான் கட்டுரை பார்த்தேன். 204 பேர் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க, குண்டாஸ் போட்டு இருக்காங்க. கொலைகளை நிறுத்துவதற்காக கூலிப்படையினுடைய பொறுப்பாளர்கள், கூலிப்படை தலைவர்கள், கூலிப்படை செய்றவங்க அவ்வளவு பேரையுமே கைது பண்ணி, ஜெயில்ல பிடிச்சு போடுறாங்க.

அவங்களால முடிஞ்ச அளவுக்கு சட்டப்படி செஞ்சிட்டு இருக்காங்க. தென் மண்டலத்தில் மட்டும் சொல்றேன். அனைத்து மாவட்டங்களிலும் இது நடக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. காவல் துறையை பத்தி பேசினா நிறையா பேசலாம். ஏன்னு கேட்டீங்கன்னா…  இவங்க சொன்னாங்க இல்ல,  ஏவுனது யாரு ?  அம்பை விட்டது யாரு ?

ஸ்டெர்லைட் பிரச்சனையில் பலிகடாக்கப்பட்டவர்கள் இந்த காவல்துறையில் இருக்கிற காவலர்கள். எட்டு, எஸ்.ஐ,  இன்ஸ்பெக்டர்கள். அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் யாருன்னு இன்னைக்கு வரைக்கும் தமிழ்நாடுஅரசு  சொல்லல,  அது தவறா ? இல்லையா ?  அப்போ அதிகாரிகளை காப்பாற்றி, பணி செய்தவனை திட்டம் போட்டு, நீங்க காலி செய்தது தப்பு என்று நான் சொல்றேன்.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் அரசு மேற்கொண்டு வருவது கண் துடைப்பு தான். அதே மாதிரி சாத்தான்குளத்தில் ஒரு அதிகாரி சொல்லி செஞ்சாங்கன்னா அது தவறு. காவல்துறை எங்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்குறாங்க. பணக்காரங்களுக்கு ஒரு சட்டம்,  ஏழைகளுக்கு ஒரு சட்டம் என்கிற மாதிரி,  பணக்காரங்களுக்கு தான் சலுகை பண்ணுறாங்க. ஏழை மக்கள் எல்லாம் போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல போய் நிக்க முடியுதுன்னு தெரிவித்தார்.

Categories

Tech |