Categories
தேசிய செய்திகள்

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் விற்பனை..மத்திய அரசு முடிவு…ஏல விண்ணப்பங்கள் வரவேற்பு..!!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை விற்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதில் வரும் ஏல விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன.

பாரத் பெட்ரோலியம்  நிறுவனத்தை விற்பனை செய்வதன்  தொடர்பாக மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்தின் மேலாண்மை துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். இந்நிலையில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மத்திய அரசு கொண்டுள்ளது. இதில் 52.98%  பங்கு மூலதனத்தை முழுமையாக விற்பனை செய்யவேண்டும் என்று அரசு முடிவெடுத்துவிட்டது.

இதற்காக வரும் ஏல விண்ணப்பங்களை , மே மாதம் 2 ஆம் தேதி வரை வரவேற்கப்பட உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்கள் இந்த ஏல விற்பனையில் பங்கேற்க கூடாது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Categories

Tech |