Categories
அரசியல் மாநில செய்திகள்

1லட்சம் ஆண்கள் இருந்தால்…. 1 லட்சம் பெண்கள் இருக்கணும்…! நச்சுன்னு வகுப்பெடுத்த திருமா ..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில், கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு மணிவிழா நடத்தினர். அதில் பேசிய திருமாவளவன், முதலாளித்துவ ஆதிக்கம் எப்படி சமூகத்தில் வெளிப்படுகிறதோ,  சாதி ஆதிக்கம் எப்படி சமூகத்தில் வெளிப்படுகிறதோ அப்படி பாலின ஆதிக்கம், ஆண் ஆதிக்கம் என்பதும் சமூகத்தில் வெளிப்படும். அது குடும்பத்திலும் இருக்கும், சமூகத்திலும் இருக்கும், ஒரு கட்சியிலும் இருக்கும்.

அப்படி இல்லாமல் இருக்க முடியாது. ஒட்டுமொத்தமாக சமூகத்திலிருந்து துடைத்தெரியப்படுகின்ற போது தான் அது குடும்பத்திலும் இல்லாமல் இருக்கும், கட்சியிலும் இல்லாமல் இருக்கும். பொது வாழ்க்கைக்கு வருகிற பெண்கள் பல்வேறு அவமதிப்பிற்கு உள்ளாக நேரிடுகிறது, விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.  இதற்கு என்ன வழி ? இதற்கு ஒரே வழி.

ஆண்கள் 100 பேர் பொதுவாழ்வில் இருந்தால், பெண்களும் 100 பேர் பொதுவாழ்வில் இருக்க வேண்டும் என்பதுதான் தீர்வு. ஒரு கட்சியில் ஆண்கள் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றால்,  அந்தக் கட்சியில் பெண்களும் ஒரு லட்சம் பேர் இருக்க வேண்டும். ஒரு லட்சம் ஆண்கள் இருக்கும் இடத்தில் 10 பெண்கள் இருந்தால்,  ஒரு லட்சம் ஆண்கள் இருக்கின்ற அமைப்பில் 100 பெண்கள் இருந்தால்,  ஒரு லட்சம் ஆண்கள் இருக்கிற இடத்தில் 200 பெண்கள் இருந்தால்,  இந்த முரண்கள் வெளிப்படையாக பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

Categories

Tech |