Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: கேரளாவில் மீண்டும் 5 பேருக்கு கொரோனா ….!!

கேரளாவில் 5 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் முதல் கட்டமாக கேரளாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  கொரோனா பாதிக்கப்பட்ட மூன்று பேர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு , அதிலிருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் மேலும் 5 பேரை கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா  இந்த தகவலை உறுதி செய்திருக்கிறார்.

பல நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பாதிப்பை தொடங்கி விட்டது. இந்தியாவில் 34 க்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு , தற்போது தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கேரளாவில் மேலும் 5 பேர் இந்த வைரஸால் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கக் கூடிய கே.கே சைலஜா தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் இருந்து திரும்பிய 3 பேரும் , அவர்களுடன் தொடர்புடைய 2 பேரும் என கேரளாவில் புதிதாக ஐந்து நபர்களுக்கு வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடைய ரத்த மாதிரிகள் புனேவில் இருக்கக்கூடிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, பாதிப்பு உறுதி செய்யப்பட்டதும் அமைச்சர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பத்தினம்திட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் தொடர்ச்சியாக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் முழுமையாக வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே சைலஜா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |