Categories
அரசியல் மாநில செய்திகள்

பிஜேபி வித்தியாசமான அரசியல் கட்சி; தமிழக அரசியலில் புது ஆக்‌ஷன்: அண்ணாமலை அதிரடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, யாராவது ஒழுங்கீனமாக பப்ளிக்ல பேசும்போது ஆக்சன் எடுத்திருப்போம்.  தமிழக அரசியல் களம் அப்படித்தான் இருக்கு. மைக்ல பேசி இருப்பாங்க உடனே நடவடிக்கை எடுத்து இருப்போம். தமிழக அரசியல் களத்தில் ஒரு கட்சியை காமிங்க என்னிடம்.. ரெண்டு தலைவர்கள் அவர்களுக்குள்ள பேசிக்கிட்டாங்க. டிஎம்கே போனோம்னா…

இதற்கு முன்னால் இருக்கக்கூடிய தலைவர்களுடைய ஆடியோ பேசினீங்கனா தனிப்பட்ட முறையில் என்னென்னமோ பேசி இருக்காங்க. அதை எல்லாம் பத்திரிகை நண்பர்களுக்கு காரணம் கேட்கும் போது,  திமுக தலைவர்கள் என்ன சொன்னாங்க ? இல்ல இல்ல அது எங்களுக்குள்ள பேசிக்கொண்டது. அது பப்ளிக்ல எப்படி வெளியே வச்சது என்று சொன்னார்கள் ?

ஆனால் பாஜகவில் இந்த விஷயத்தில் அந்த காரணத்தை நாங்கள் ஏற்க போவது கிடையாது என்று தான் நான் சொல்கிறேன். இது அரசியலில் புதுசு. பப்ளிக்ல பேசல, மைக்ல பேசல,  வேற யாரையும் நான் திட்டவில்லை. எங்களுக்குள்ள திட்டிகொண்டோம் என்று சொன்னாலும் கூட,  பிஜேபி ஒரு கட்சி. வித்தியாசமான அரசியல் கட்சி,  நாகரீகமான அரசியல் கட்சி. இந்த விஷயத்துல அந்த கருத்தை நான் ஏற்கப் போவது கிடையாது என்தை சொல்கின்றேன்.

விசாரணை ஏன் தேவை என்றால் ? இதுல இரண்டு விஷயம் இருக்கு. ஏன்னா ஒரு நடவடிக்கை எடுத்ததுக்கப்புறம்…  சமூக வலைதளத்துல ஒரு கருத்தை பதிவு செய்யுறீங்க, அது உங்க கருத்து. அது உங்களுடைய ட்விட்டில் இருந்து,  உங்க ஹேண்டில் இருந்து, அது உங்களுடைய கருத்தாக வருது.நீங்க பேஸ்புக்ல ஒரு கருத்து போடுறீங்க. அது உங்க பேர்ல இந்த அக்கவுண்ட்.

நீங்க தான் போட்டு இருக்கீங்க. அதற்கு விசாரணை தேவையில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இதே போல ஆடியோ கான்வர்சேஷன் வரும்போது,  என்னதான் இருந்தாலும்… அதுல சில பேர்கள் சில காரணத்தை சொல்ல விரும்புவார்கள். அப்படி பேசுனேன், இப்படி பேசுனேன். அவங்க தான் முதலில் பேசினாங்க, நானும் ஒரு ஆடியோ கொடுக்கிறேன்.  இந்த மாதிரி கருத்துக்கள் சொல்வதற்கு எல்லாம் வாய்ப்பும் இருக்கு. அதனால தான் விசாரணை என்பது தேவைப்படுகிறது என தெரிவித்தார்.

Categories

Tech |