Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த மீன்களை வாங்காதீர்கள்..! உங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும்.!!

பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணும் உணவு பட்டியலில் மீன் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. மீன்கள் தனிச்சுவையும் ஊட்டச்சத்துக்களும் மிகுந்த சிறந்த மாமிச உணவாகும். வைட்டமின் ஏ, டி, இ மற்றும் பி போன்ற உயிர்ச்சத்துகளும் நிறைந்துள்ளன எனவே மருத்துவர்கள் மீன் உணவு வகைகளை அதிகமாக பரிந்துரை செய்கின்றனர்.

குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மீன் சாப்பிடுவது மிகவும் நல்லது. வாரத்திற்கு ஒருமுறையாவது மீன் எடுத்துக்கொள்ளவது அவசியம்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மீன்களில் நல்ல மீன்கள் எப்படி பார்த்து வாங்குவது என்று பலருக்கும் தெரியாது. ஆனால் காய்கறி வாங்குவது குறித்து அனைவர்க்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது.

 

 

நல்ல மீன்கள்  பார்த்து வாங்குவது எப்படி என்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.!!

  1. மீன் பார்க்கும்போதே புதிது போல் இருந்தால் அது நல்ல மீன்.
  2. மீனின் கண்களைப் பார்க்கும் போது அது தெளிவாக இருந்தால் அது நல்ல மீன் ஒருவேளை அதன் கண்கள் மங்கலாக இருந்தால் அந்த மீன் வாங்காதீர்கள்!
  3. நீங்கள் வாங்க  ஆசைப்பட்ட மீனின் மீது ஏதேனும் காயங்கள் இருந்தால் அதை வாங்காதீர்கள்! இந்த ஒரு விஷயம் வைத்து நீங்கள் கண்டுபிடித்து விடலாம்.
  4. மீன்களின் செதில்களை திறந்து பார்க்கும்போது நல்ல மீன் என்றால் இளஞ்சிவப்பாக இருக்கும். அதுவே சாம்பல் நிறத்தில் இருந்தால் அது கெட்டுபோன மீன்.
  5. மீன்களின் மேல் செதில்கள் அதிகமாகவும், முள் அதிகமாக இருந்தாலும் அந்த மீன் மிகவும் ருசியாக இருக்கும்.
  6. மீனை தொடும்போது கொளகொளவென்று இருந்தால் அது கெட்டுப் போய் உள்ள மீன் ஆகும்.

Categories

Tech |