ஆசியக் கோப்பைக்கு இந்திய அணி வரவில்லை என்றால், 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கு நங்கள் வரமாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா அறிவித்துள்ளார்.
2023 ஆசியக் கோப்பையில் பங்கேற்க மென் இன் ப்ளூ (இந்தியா) அணியினர் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். அதாவது கடந்த மாதம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவரும், பிசிசிஐ தலைவருமான ஜெய் ஷா 2023 ஆசியக்கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், போட்டியை வேறு ஒரு நடுநிலையான இடத்திற்கு நடத்த வேண்டும் என்றும், அப்படி நடத்தினால் இந்தியா பங்கேற்கும் என்று தெரிவித்தார்.
ஜெய் ஷாவின் கருத்து பாகிஸ்தானில் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் நீங்கள் வரவில்லையென்றால் நாங்கள் உலகக்கோப்பையில் பங்கேற்க மாட்டோம் என்றும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு கோரியது. பிசிபி தலைவர் ரமிஸ் ராஜாவும் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பைக்கு இந்திய அணி வரவில்லை என்றால், 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குச் செல்லாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் (பிசிபி) தலைவர் ரமிஸ் ராஜா அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ரமீஸ் ராஜா கூறியதாவது, “அடுத்த ஆண்டு இந்தியாவில் திட்டமிடப்பட்ட 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை என்றால், அதை யார் பார்ப்பார்கள்?”. எங்களுக்கு தெளிவான நிலைப்பாடு உள்ளது.. டீம் இந்தியா இங்கு [ஆசியா கோப்பைக்கு] வந்தால், நாங்கள் உலகக் கோப்பைக்கு செல்வோம். அவர்கள் வரவில்லை என்றால் அவர்கள் நாங்கள் இல்லாமல் உலகக் கோப்பையை விளையாடலாம்.” என்றார்.
மேலும் நாங்கள் ஆக்ரோஷமான அணுகுமுறையை கடைப்பிடிப்போம். எங்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன், நாங்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அது நடக்கும். 2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினோம். டி20 ஆசிய கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினோம். ஒரு வருடத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, பில்லியன் டாலர் பொருளாதார அணியை இரண்டு முறை தோற்கடித்தது,” என்று கூறினார்.
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023, இந்தியாவில் நடத்தப்பட உள்ளது, இது 50 ஓவர் உலகக் கோப்பையின் 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடராகும். குறிப்பிடத்தக்க வகையில், பாகிஸ்தானும் இந்தியாவும் இருதரப்பு கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் பதட்டங்கள் காரணமாக 2013 முதல் உலகளாவிய போட்டிகள் அல்லது பல அணி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் மட்டுமே சந்திக்கின்றன. அதாவது, ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டுமே பங்கேற்கிறது..
பாகிஸ்தானுக்கு இந்தியாவின் கடைசி பயணம் 2008 ஆசிய கோப்பைக்காக இருந்தது, அதே நேரத்தில் பாகிஸ்தானின் கடைசி பயணம் 2016 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்காக இருந்தது. 2 அணிகளும் கடைசியாக 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி மெல்போர்னில் டி20 உலகக் கோப்பையில் மோதியது குறிப்பிடத்தக்கது..
Ramiz Raja says that if India don't play the Asia Cup in Pakistan, Pakistan won't play the World Cup in India next year.#Cricket pic.twitter.com/8IizhYGN2E
— Grassroots Cricket (@grassrootscric) November 25, 2022