தமிழகத்தில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் நடப்பு ஆண்டிற்கான இலவச நீட் பயிற்சி எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் இலவச பயிற்சி வகுப்பு இன்று நவம்பர் 26 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த வருடம் 29 ஆயிரம் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக ஒன்றியத்திற்கு ஒரு மையம் வீதம் 414 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பயிற்சி மையத்திற்கு 70 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பிளஸ் 1 வகுப்பு 20 பேரும் பிளஸ் டூ வகுப்பில் 60 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.