மருத்துவம் படிப்பதற்கு நீட் மதிப்பெண் அவசியமாகிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிறப்பு பயிற்சி வகுப்பு மூலமாக பயின்று தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பயிற்சி பெற முடியாத நிலை இருந்தது. இதனை முறியடிக்கும் விதமாக இலவச பயிற்சி ஆனது பள்ளிக் கல்வித் துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
கடந்த 2 வருடமாக கொரோனா காரணமாக ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த வருடம் நேரடி பயிற்சி வகுப்பு நடத்த பள்ளிகல்விதுறை முடிவு செய்தது. அதன்படி இந்த வருடம் தமிழகம் முழுவதும் 29 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு நீட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 11ஆம் வகுப்பில் 20 பேரும், 12 ஆம் வகுப்பில் 50 பேரும் இந்த வகுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இன்று முதல் இந்த வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.