இந்தியாவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே சமயம் அவர்கள் தயாரிக்கும் பொருள்கள் அதிக லாபம் தரும் வகையில் சந்தைப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதனால் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் முடியும். மகளிர் சுய உதவி குழுக்களின் பொருள்கள் தேசிய ஊரக வாழ்வாதார இயக்ககம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கமாகிய அவற்றால் அமைக்கப்பட்ட கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் மகளிர் சுய உதவி குழுவின் பொருள்களை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதற்கு மின்னணு வர்த்தக இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மகளிர் சுய உதவி குழுவின் பாரம்பரியமிக்க மற்றும் இயற்கையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த இணையதளம் மூலமாக ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் ஊழியர்களும் அரசு ஊழியர்களும் வாங்கி பயன்பெறுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.