தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக அதிமுக மற்றும் பாஜகவினர் சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பி வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண் இணைக்கவில்லை என்றாலும் மின்கட்டணம் செலுத்தலாம். ஆதார் எண் இணைப்பது நல்லது. மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண் இணைப்பது அவசியம். பெயர் மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைப்பு ஆகியவற்றிற்காக விரைவில் முகாம்கள் நடத்தப்படும். ஆதார் எண் இணைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மின்சார துறையை சீர்திருத்தம் செய்ய ஆதார் எண் இணைப்பது மிகவும் அவசியம் எனவும் ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.