Categories
மாநில செய்திகள்

ஷாக்!…. தமிழகத்தில் 25% பால் கொள்முதலை குறைத்த ஆவின் நிறுவனம்?…. கவலையில் விவசாயிகள்….!!!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது ஆவின் நிறுவனம் சார்பில் 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய திமுக அரசு 30 லட்சம் லிட்டர் பாலை மட்டும் தான் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதாவது விவசாயிகளிடமிருந்து 25% பால் கொள்முதலை குறைத்துள்ளதாம். ஏற்கனவே தமிழகத்தில் மின்சார துறை மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது ஆவின் நிறுவனத்திலும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவை குறைத்தது விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறையை போன்று ஆவின் நிறுவனமும் பெருத்த நஷ்டத்தை நோக்கி போவதாக விவசாயிகளும், ஊழியர்களும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

Categories

Tech |