Categories
சினிமா

அடேங்கப்பா!…. முதல் வாரத்தில் மட்டும்…. வசூலை அள்ளி குவித்த ஹிந்தி த்ரிஷ்யம்…. எவ்வளவு தெரியுமா?….!!!!

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகிய படம் த்ரிஷ்யம். கேரள மாநிலத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழில் கமல், கெளதமி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்ற பெயரில் வெளிவந்து வெற்றி பெற்றது. தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, சீனம், சிங்களம் போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

தமிழை தவிர்த்து இதர மொழிகளில் வெளியாகிய ரீமேக்கை வேறு இயக்குநர்கள் இயக்கினர். இதையடுத்து மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் த்ரிஷ்யம் 2 அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியது. அத்துடன் அஜய் தேவ்கன், தபு, ஷ்ரேயா சரண் நடிப்பில் த்ரிஷ்யம் திரைப்படத்தின் முதல்பாகம் 2015ல் ஹிந்தியில் வெளியாகியது. இப்படத்தின் 2வது பாகத்தில் அஜய் தேவ்கன், தபு, ஷ்ரேயா சரண், அக்‌ஷய் கண்ணா ஆகியோர் நடித்தனர்.

இதை அபிஷேக் பதக் இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். த்ரிஷ்யம்-2 நவம்பர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகியது. இந்த நிலையில் ஹிந்தி த்ரிஷ்யம் 2 படம் வெளியான ஒரே வாரத்தில் மட்டும் ரூபாய்.100 கோடி வசூலை குவித்துள்ளது. முதல் 7 நாட்களில் அப்படம் இந்தியாவில் ரூபாய். 104 வசூலை அடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக 2022ல் அதிக வசூலை எட்டிய ஹிந்திப் படம் என்ற சாதனையை ஹிந்தி த்ரிஷ்யம் 2 அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |