Categories
உலக செய்திகள்

திருடனை மடக்கி பிடித்த இந்தியர்…. பாராட்டு சான்றிதழ் வழங்கிய துபாய் காவல்துறை…!!!

துபாயில் திருடனை பிடித்துக்கொடுத்த இந்தியாவை சேர்ந்த இளைஞருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

துபாயின் தெஹ்ரா மாவட்டத்தில் 42, 50,000 திர்ஹாம் பணத்துடன் இருவர் சென்றிருக்கிறார்கள். அவர்களின் பின்னால் சென்ற ஒரு நபர் திடீரென்று அந்த பையை பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டார். உடனே இருவரும் சத்தம் போட்டிருக்கிறார்கள். அப்போது அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த கேஷுர் காரா சவாடா காருகேலா என்ற 32 வயது இளைஞர் அந்த திருடனை ஓடிச்சென்று பிடித்து விட்டார்.

அதன் பிறகு, காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரை கைது செய்து விட்டனர். திருட்டு முயற்சியை துணிச்சலாக தடுத்த இந்தியரான அந்த இளைஞரை காவல்துறையினர் பாராட்டி இருக்கிறார்கள். மேலும், அவர் பணியாற்றும் இடத்திற்கு நேரடியாக சென்று பாராட்டு சான்றிதழையும், பதக்கத்தையும் அளித்து சிறப்பித்திருக்கிறார்கள்.

அந்த இளைஞர் சக ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் துபாய் காவல் துறையினர் தன்னை சிறப்பித்தது மறக்க முடியாத நிகழ்வு என்று நெகிழ்ந்திருக்கிறார்.

Categories

Tech |