சென்னை மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டமானது இன்று தொடங்கப்பட்டது. இந்த விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். அதன் பிறகு 500 பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்புகளின் மூலம் பேருந்து நிறுத்தத்தை பயணிகள் முன்னதே தெரிந்து கொள்ளும் விதமாக பேருந்துகளில் ஜிபிஎஸ் ஒலி அறிவிப்பு பொருத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டமானது முதல் கட்டமாக 500 பேருந்துகளில் தொடங்கப்பட்டுள்ளது. அதன்பின் கூடுதலாக 1000 பேருந்துகளில் திட்டத்தை செயல்படுத்துவதற்கும் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது, முதல் கட்டமாக 150 மாநகர அரசு பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ள நிலையில், மற்ற பேருந்துகளுக்கும் திட்டமானது விரிவு படுத்தப்படும். அரசு பேருந்துகளில் பயணம் செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினார். இதனையடுத்து செய்தியாளர் ஒருவர் நாளை பிறந்தநாள் நாளை கொண்டாடும் நிலையில் அமைச்சரவை குறித்து அறிவிப்பு வருமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு முதலமைச்சர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பதில் அளித்தார்.