Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி கடற்கரையில் 80 கிலோ ராட்சத பச்சைக் கடல் ஆமை… உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது..!!!

தூத்துக்குடி கடற்கரையில் 80 கிலோ எடை கொண்ட ராட்சத பச்சை கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

மன்னர் வளைகுடா கடல் பகுதியில் அதிக அளவில் காணப்படக்கூடிய ஒரு அரிய வகை உயிரினமான பச்சை கடல் ஆமை தூத்துக்குடி துறைமுகம் கடற்கரை உயிரிழந்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனச்சரகர் தலைமையிலான குழு இறந்து கிடந்த பச்சை கடல் ஆமையை மீட்டார்கள்.

இந்த ஆமை சுமார் 80 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்த ஆமையின் உடலில் எந்தவித காயங்களும் இல்லாததால் வயது மூப்பு காரணமாக உயிர் இழந்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றார்கள். ஆமையின் இறப்பு குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |