Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

அடிக்கடி அசைவம் சாப்பிடுவது நல்லதா.?தீமையா.?

அசைவம் பிரியர்கள் அடிக்கடி உணவில் அசைவம் எடுத்து கொள்வார்கள். ஆனால் அது நம் உடலுக்கு நன்மை அளிக்கிறதா.?தீமையா.? என்று அறிந்து கொள்ளுங்கள்..!

அசைவ உணவுகளில்  நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது. எனவே இதய ரத்த நாளங்களில் உள்ள நல்ல கொழுப்பை கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்து ரத்த நாளங்களில் அடைப்பு, மாரடைப்பு, திடீர் இதய துடிப்பு நிற்பது, பக்கவாதம் போன்ற தீவிரமான பாதிப்புகளுக்கு காரணமாகிறது.

தினசரி அசைவ உணவுகள் சாப்பிடும் பொழுது, நம் உடலில் அளவுக்கு அதிகமாக புரதம் சேர்கிறது. இதனால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு  சிறுநீரகம் அதனுடைய முழுமையான செயல்பாட்டை இழக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. ஆகவே நம்முடைய உணவில் அடிக்கடி அசைவம் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. எனவே எதிலும் அளவோடு இருந்தால் நன்மையை பெறலாம்..!

Categories

Tech |