மெக்சிகோவில் ஒரு பெண் ஐந்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து தன் இணையதள காதலனை சந்திக்க சென்று பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவில் 51 வயதுடைய பிளாங்கா ஒலிவியா ஆரில்லேனோ கட்டிரெஸ் என்ற பெண் இணையதளத்தில் ஜூவான் பேப்லோ ஜீசஸ் வில்லாபுர்தே என்ற நபருடன் பழகி வந்துள்ளார். இருவரும் காதலிக்க தொடங்கிய பிறகு நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். எனவே அந்த பெண் காதலரை சந்திப்பதற்காக உற்சாகத்துடன் 5000 கிலோமீட்டர் பயணித்து சென்றிருக்கிறார்.
அதன் பிறகு அவர் என்ன ஆனார்? என்றே தெரியவில்லை. பிளாங்காவின் உறவினர் ஒருவர், ஜூவானை தொடர்பு கொண்டு பிளாங்கா அங்கு வந்து சேர்ந்திருக்கிறாரா? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், “எரிச்சலாக இருக்கிறது, நான் மெக்சிகோவிற்கு திரும்பி செல்கிறேன்” என்று கூறிவிட்டு பிளாங்கோ சென்று விட்டதாக கூறியிருக்கிறார்.
அதன் பிறகு, அவரை தேடி அலைந்த பிளாங்காவின் குடும்பத்தினருக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்தது. இந்நிலையில் ஒரு கடற்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் தன் வலையில் ஒரு பெண் உடல் சிக்கியதாக கூறியிருக்கிறார். அந்த பெண் பிளாங்கா தான். அவரின் உடல் உறுப்புகளும் காணாமல் போயிருக்கிறது.
இதற்கு நீதி வேண்டும் என்று அவரின் உறவினர் குரல் கொடுத்திருக்கிறார். பிளாங்காவின் காதலரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. விசாரணையில் அவர் பிளாங்காவின் உடல் உறுப்புகளை திருடியதும் தெரிய வந்திருக்கிறது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.