தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச்சட்டப்படி குற்றம்சாட்டப்பட்டு சென்ற மே 30ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் திகாா் சிறைச்சாலையிலுள்ள அவா், படுக்கையில் படுத்தவாறு சில ஆவணங்களைப் படிப்பதும், அவரது கால்களை ஒருவா் மசாஜ் செய்யும் காட்சிகள் இடம்பெற்ற சிசிடிவி காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் எதிர்க் கட்சியினர் பலரும் இது தொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர். வீடியோவில் சிலர் சத்யேந்தர் ஜெயின் அறைக்கு வந்து அவரிடம் பேசுவது போன்ற காட்சிகள் இருக்கிறது. மேலும் திகார் சிறை கண்காணிப்பாளர் அஜித்குமாரும் வந்து அமைச்சரிடம் பேசுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த மாத துவக்கத்தில் சிறை கண்காணிப்பாளர் அஜித்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.