Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவை மிகுந்த சிக்கன் குழம்பு..!!

அருமையான, சுவை மிகுந்த சிக்கன் குழம்பு..இப்படி சமைத்து பாருங்கள் ருசி கூடும்..!

அரைத்து கொள்ள வதக்க வேண்டியவை:
எண்ணெய்                   – 2 ஸ்பூன்
சோம்பு                           –  ஒரு ஸ்பூன்
பெரிய வெங்காயம்-2
தக்காளி                         -2
இஞ்சி                               – ஒரு துண்டு
பூண்டு                             –  20 பல்
பச்சைமிளகாய்         –  3

குழம்பு செய்ய தேவையானவை:

எண்ணெய்                         –  3 ஸ்பூன்
பட்டை                                   –  3
பிரியாணி இலை            –  இரண்டு
ஏலக்காய்                            -2
லவங்கம்                              – நான்கு
பெரிய வெங்காயம்      -2
கறிவேப்பிலை                 – சிறிதளவு
தக்காளி                              -1
இஞ்சி பூண்டு விழுது    –  ஒரு ஸ்பூன்
சிக்கன்                                 – ஒரு கிலோ
மிளகாய்த் தூள்               – ஒன்றரை ஸ்பூன்
மல்லி தூள்                         – 2 ஸ்பூன்
கரம்மசாலா                     – ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள்                     – அரை ஸ்பூன்
கொத்தமல்லித்தழை  – சிறிதளவு
முந்திரிபருப்பு                – 10
பால்                                      – 50 மில்லி
கொத்தமல்லி                  – சிறிதளவு
அரைத்து வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி கலவை.

செய்முறை:

வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து பொரிந்ததும், நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வதங்கியதும் பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியும் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் இஞ்சி,  உரித்து வைத்திருக்கும் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இவை வதங்கிய பின்னர் மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, பிரியாணி இலை ,ஏலக்காய், லவங்கம் போட்டு பொரிந்ததும், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். சிறிதளவு கறிவேப்பிலை , பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து ஓரளவு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

இப்பொழுது கழுவி வைத்திருக்கும் சிக்கன் கறி இதோடு சேர்த்து நன்றாக கிளறி விட்டு, அரைத்து வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும். பிறகு  மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா,கொத்தமல்லி தழை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின்னர் 50 மில்லி பாலில், 11 பாதாம் முந்திரிப் பருப்பை ஊறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த இந்த கலவையை சிக்கன் குழம்பு கொதித்ததும் இதை ஊற்றி கிளறி ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும். மிக சுவையான சிக்கன் குழம்பு ரெடி..!

Categories

Tech |