Categories
தேசிய செய்திகள்

“பெண்கள் ஆடை அணியாவிட்டாலும் அழகுதான்”… ராம்தேவ் பாபா சர்ச்சை பேச்சு…. மகளிர் ஆணையம் நோட்டீஸ்….!!!!

நேற்று தானேயில் நடைபெற்ற ஒரு விழாவில் ராம்தேவ் பாபா பங்கேற்றார். மேலும் இவ்விழாவில் மராட்டிய மாநில முதல் மந்திரியின் மகனும் எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே மற்றும் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் போன்றோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ராம்தேவ் பாபா பேசியதாவது, பெண்கள் சேலையில் அழகாக இருக்கின்றனர். சல்வார் உடையிலும் அழகாக இருக்கின்றனர்.

எனினும் என் பார்வையில் அவர்கள் ஒன்றும் அணியாவிட்டாலும் அழகாக தெரிகிறார்கள் என கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து சகாங்கர் அனுப்பியுள்ள நோட்டீசில், பெண்களின் கவுரவத்தையும் கண்ணியத்தையும் கெடுக்கும் அடிப்படையிலான அநாகரீகமான உங்களது கருத்துக்கு எதிராக ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டு உள்ளது. மராட்டியம் மகளிர் ஆணையமானது, ராம்தேவ் தன் கருத்து குறித்த விளக்கத்தை 3 நாட்களுக்குள் கமிஷன் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு ஆணையம் அறிவுறுத்துகிறது என கூறியுள்ளது.

Categories

Tech |