Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!…. நடிகர் அதர்வாவுக்கு காதல் தோல்வியா….? அட என்னப்பா சொல்றீங்க…. அவரே சொன்ன விளக்கம் இதோ…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த முரளியின் மகன் நடிகர் அதர்வா. ஓரளவுக்கு ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்த நடிகர் அதர்வா தற்போது பட்டத்து அரசன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பட்டத்து அரசன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் அதர்வா கலந்து கொண்டார்.

அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் அதர்வாவிடம் உங்களுக்கு வாழ்க்கையில் காதல் தோல்வி ஏற்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கண்டிப்பாக எனக்கு காதல் அனுபவங்கள் இருக்கு என்று அதர்வா கூறினார். ஆனால் அதுவெல்லாம் எல்லோர் வாழ்க்கையிலும் வரும் ஒரு சகஜமான விஷயம்தான். எனக்கு மிகப்பெரிய அனுபவங்கள் காதலில் ஏற்பட்டதில்லை. எனக்கு இதுவரை அப்படி எதுவும் வரவில்லை என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் அதர்வா காதல் குறித்து பேசியது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |