Categories
உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

கருவுற்ற பெண்கள் முதல் மூன்று மாதம் இந்த அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்..!!

கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்..!

கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரதம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது. புரதம் கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும் உதவும். ஆகவே கர்ப்பிணிகள் இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிடுவது நல்லது.

நாட்டுக்கோழி:

கர்ப்பிணிகளுக்கு நாட்டுக்கோழி ஒரு பாதுகாப்பான மற்றும் முக்கியமான உணவும் கூட, ஏனெனில் இதை முதல் மூன்று மாதங்கள் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொண்டால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் காலை மயக்கம், சோர்வு போன்றவை நீங்கும். மேலும் நாட்டுக்கோழியில் இரும்புச்சத்தானது அதிகம் இருப்பதால் உடலில் இரத்த ஓட்டமும் நன்கு அதிகரிக்கும்.

நாட்டுக்கோழி முட்டை:

முட்டையில் அதிக அளவு புரதம் நிறைந்திருப்பது எல்லோரும் அறிந்த விஷயமே. எனவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவது தாய்க்கு மட்டுமின்றி சேய்க்கும் நல்லது.

சால்மின் மீன்:

மீனில் கொழுப்பு அமிலம், கால்சியம், வைட்டமின் டி அதிகம் இருப்பதால் கர்ப்பிணிகள் மீன் உண்பது நல்லது. ஆனால் மீன்களில் சால்மின்  என்ற மீனில் மற்ற அனைத்து மீன்களையும் விட அதிக அளவில் இரும்பு சத்துக்கள் உள்ளது. கருவிற்கும் இந்த மூன்று அசைவ உணவுகளையும் முதல் மூன்று மாதங்களில் சாப்பிடுங்கள்..!

Categories

Tech |