காந்தாரா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு விதித்த தடையை நீக்கி பாலக்காடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் உலக அளவில் ரூபாய் 400 கோடி வசூல் செய்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.
இந்த நிலையில் தங்களது நவரசம் பாடலை காப்பியடித்து காந்தாரா திரைப்படத்தில் வராஹ ரூபம் பாடலை உருவாக்கி இருப்பதாக கேரளாவை சேர்ந்த பிரபல இசைக்குழு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாடலை பயன்படுத்துவதை தடை விதிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் தற்போது ஓடிடியில் இந்த பாடல் இல்லாமலேயே படம் வெளியானது. தற்போது பாடலுக்கான தடையை பாலக்காடு நீக்கி உத்தரவிட்டு இருக்கின்றது.