Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஓரு உயிர் போனாலும் ஆளுநர்தான் பொறுப்பு…. அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பலரும் பணத்தை இழந்து தற்கொலை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் ஆன்லைன் ரம்மிக்கு அரசு அவசர சட்டம் அண்மையில் கொண்டு வந்தது. இருந்தாலும் அதற்கு ஆளுநர் ஆட்சியும் காட்டி வருவதாக பல தரப்பினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே முழு பொறுப்பு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு இன்றைக்குள் ஆளுநர் ஆர் என் ரவி கையெழுத்திட வேண்டும். தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தும் ஆளுநர் அலட்சியம் காட்டுவது நியாயம் அல்ல. ஆளுநர் தமிழ்நாட்டில் அரசியல் செய்யக்கூடாது. ஆன்லைன் ரம்மியால் ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ளார்.

Categories

Tech |