வடிவேலு பாடியுள்ள பணக்காரன் பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரிக்கிறது.
இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான அப்பத்தா பாடல் நல்ல வரவைப்பை பெற்ற நிலையில் இத்திரைப்படத்தின் பணக்காரன் என்ற பாடல் நேற்று வெளியாகி இருக்கின்றது. இந்த பாடலை வடிவேலு பாடி இருக்கின்றார்.
The Quirky 🤪 track from #NaaiSekarReturns 🐶💯 🎼 #PANAKKARAN 🤑 is OUT NOW!
🎤 Vaigai Puyal #Vadivelu 🌪️ & @Music_Santhosh🎹 @Lyricist_Vivek 🖋️@Director_Suraaj 🎬 @thinkmusicindia 💿 @gkmtamilkumaran 🤝 @LycaProductions #Subaskaran 🪙 pic.twitter.com/fjlcsYViWh
— Lyca Productions (@LycaProductions) November 26, 2022