Categories
தேசிய செய்திகள்

எலிக்கு உடற்கூறாய்வு… 10 மணி நேரம் விசாரணை…. அப்படி என்ன நடந்தது…??

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சகர் கோட்பாலி என்ற பகுதியில் உள்ள காந்தி மைதானம் அருகே விலங்குகள் நல உரிமை ஆர்வலரான விக்கேந்திரன் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மனோஜ் குமார் கையில் எலியை வைத்துக்கொண்டு கொடுமைப் படுத்தி வந்துள்ளார். அவரிடம் சென்று இப்படி செய்ய வேண்டாம் அது பாவம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் விக்கேந்திரான். ஆனால் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாத அந்த இளைஞர் மேலும் மேலும் அந்த எலியை துன்புறுத்தியுள்ளார். பின்னர் எலியை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றுள்ளார்.

இதனையடுத்து மனோஜ் குமார் என்பவர் எலியின் வாலில் கல்லை கட்டி, வடிகால் நீரில் மூழ்கடித்து கொன்றதாக விலங்கு ஆர்வலர் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து போலீசார், மனோஜ் குமாரை அழைத்துச் சென்று 10 மணி நேரம் காவலில் வைத்திருந்துள்ளனர். மேலும், எலியை உடற்கூறாய்வு செய்ய கால்நடை மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |