Categories
உலக செய்திகள்

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை… மருத்துவ உலகில் அதிசய நிகழ்வு…!!!

மெக்சிகோவில் ஒரு குழந்தை இரண்டு அங்குலம் நீள வாலுடன் பிறந்தது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

மெக்சிகோவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் பிரசவத்திற்காக ஒரு கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அறுவை சிகிச்சை செய்து அவருக்கு குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தையின் பின்புறம் இரண்டு அங்குலம் கொண்ட வால் இருந்திருக்கிறது.

அந்த வால் பகுதியில் முடி மறைத்து காணப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதனை மருத்துவர்கள் நீக்கி இருக்கிறார்கள். தற்போது, குழந்தை நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு மருத்துவ உலகிலேயே பெரும் அதிசயமாக பார்க்கப்படுகிறது.

Categories

Tech |