தூத்துக்குடி எம்.பியும், திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழியின் வீட்டில் மர்ம நபர் ஒருவர் நுழைந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் ஐயப்பன் நகரில் உள்ள கனிமொழியின் வீட்டில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அப்போது கனிமொழி அங்கில்லை. அவர் எதற்காக அந்த நேரத்தில் எம்பி-யின் வீட்டுக்குள் வந்தார் என்று போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடந்து இந்த சம்பவத்தை தொடர்ந்து கனிமொழி தங்கியிருக்கும் வீட்டிற்கு நான்கு ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Categories