மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின் போது வீர தீர செயல்களுக்காக அண்ணா பதக்கம் முதலமைச்சர் கையால் வழங்கப்படுவது வழக்கம். இதில் 1 லட்சத்திற்கான காசோலை, ஒரு பழக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் அடங்கும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் குடி மக்களுக்கும் வயதை பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினை காப்பதில் வீர தீர செயல்களை புரிந்தவர்களாக இருக்க வேண்டும்
மேலும் தகுதியானவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்தோ அடுத்த மாதம் 15 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்குப் பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.