Categories
உலக செய்திகள்

ரூ 40,00,000 பரிசு… அடர்ந்த பனியில் 1, 609 கி.மீ தூர நாய்கள் வண்டி பந்தயம்… அலாஸ்காவில் கோலாகல தொடக்கம்!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 1, 609 கி.மீ தூர நாய்கள் வண்டி பந்தயம் கோலாகலமாக தொடங்கியது. 

அமெரிக்க நாட்டின் அலாஸ்கா மாகாணம் ஏங்கரேஜ் (Anchorage) நகரத்தில் இருந்து தங்கள் நாய்களுடன் போட்டியாளர்கள் புறப்பட்டு விட்டார்கள். அநேகமாக 9 நாட்களுக்குப் பிறகுதான் அவர்கள் இறுதி இடமான நோம் நகரை (Nome) அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image result for Alaska Airlines drops sponsorship of Iditarod sled dog race

இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு  40 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்படும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். முன்னெப்போதும் இல்லாத அளவை விட அதிக பனி இருப்பதால், அடர்ந்த காடுகள் வழியேநடக்கும் இந்தப் போட்டி புதிய அனுபவத்தை தரும் என்று நம்புவதாக போட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Categories

Tech |